அவிஷ்கா சதம்: முதல் ஒருநாள் ஆட்டத்தில் தெ.ஆ. அணியை வீழ்த்திய இலங்கை (ஹைலைட்ஸ் விடியோ)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி.
கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் அவிஷ்கா 118 ரன்களும் சரித் அசலங்கா 72 ரன்களும் எடுத்தார்கள். பிறகு விளையாடிய தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மார்க்ரம் 96 ரன்களும் வாண் டர் டுசென் 59 ரன்களும் எடுத்தார்கள். இலங்கை அணி கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இலக்கை அடைய முடியாமல் போனது.
2-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.