செய்திகள்

ரூட் காலி: வெற்றியின் விளிம்பில் இந்தியா!

4-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் ஆட்டமிழந்ததையடுத்து, இந்தியா வெற்றியை நெருங்கி வருகிறது.

DIN


4-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் ஆட்டமிழந்ததையடுத்து, இந்தியா வெற்றியை நெருங்கி வருகிறது.

 இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 466 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து கடைசி நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் ஹசீப் ஹமீத் (63) விக்கெட்டை முதலில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். இதன்பிறகு, ஜாஸ்பிரித் பும்ரா சிறப்பான ஓவர்களை வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நடுங்கச் செய்தார். இதனால், முதலில் ஆலி போப் 2 ரன்களுக்கு பும்ரா பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். இதனால், இங்கிலாந்து கடுமையான நெருக்கடிக்குள்ளானது. இதிலிருந்து மீள்வதற்குள் மொயீன் அலி (0) விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். 

இதனால், அந்த அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து கேப்டன் ஜோ ரூட்டுடன் கிறிஸ் வோக்ஸ் இணைந்தார். இந்த இணை சற்று பாட்னர்ஷிப் அமைத்தது. 80 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தை மாற்றும் வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதைச் செய்யவில்லை. ஆனால், ஷர்துல் தாக்குர் வீசிய முதல் பந்திலேயே ரூட் 36 ரன்களுக்கு போல்டானார். இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஒரே இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட். அவரது விக்கெட் இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தில் 41 ஓவர்கள் வரை வீசப்பட வேண்டிய நிலையில், ரூட் உள்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகிறது.

தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெளியேற்றம்!

பாலவாக்கம் வேம்பு அம்மன்!

இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு

பாறையில் வலம்புரி விநாயகர்!

SCROLL FOR NEXT