முகப்பு
செய்திகள்

மான்செஸ்டர் டூ துபை: சிஎஸ்கே வீரர்களை அழைக்கும் முயற்சியில் நிர்வாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்களை மான்செஸ்டரிலிருந்து துபைக்கு அழைத்து வரும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்களை மான்செஸ்டரிலிருந்து துபைக்கு அழைத்து வரும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:

"தற்போது டெஸ்ட் ஆட்டம் இல்லை. சிஎஸ்கே வீரர்களை நாளை துபைக்கு அழைத்து வர முயற்சித்து வருகிறோம். ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா உள்ளிட்ட வீரர்கள் சனிக்கிழமை துபை வர முடியும் என அணி எதிர்பார்ப்புடன் உள்ளது."

சிஎஸ்கே வீரர்கள் துபை சென்றவுடன் 6 தனிமையில் இருப்பார்கள். அதன்பிறகு, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்களுடன் இவர்களும் இணைவார்கள்.

முன்னதாக, இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் ஆட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →