செய்திகள்

ஜோ - ராஜீவ் ஜோடி சாம்பியன்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.

DIN

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருந்த அந்த ஜோடி இறுதிச்சுற்றில் 3-6, 6-2, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தின் ஜேமி முா்ரே/பிரேஸின் புருனோ சோரஸ் இணையை வீழ்த்தியது.

ஜோ/ராஜீவ் ஜோடிக்கு இது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்த இணை பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்நாலி/கோகோ கௌஃப் இணை, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசா்/சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT