செய்திகள்

நன்றி மலிங்கா: மும்பை இந்தியன்ஸ்

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக லசித் மலிங்கா அறிவித்ததையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

DIN


டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக லசித் மலிங்கா அறிவித்ததையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக லசித் மலிங்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மலிங்கா விளையாடிய ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மலிங்கா ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: 

"டி20 கிரிக்கெட்டில் மலிங்கா எல்லாவற்றையும் சாதித்துவிட்டார். டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, அவரிடம் கூற எங்களிடம் இவை மட்டுமே உள்ளன -  'நன்றி மலிங்கா'"

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸுக்காக 122 ஆட்டங்களில் விளையாடியுள்ள லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT