யுஎஸ் ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்
நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபனில் இருந்து விலகினாா் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ்.
நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபனில் இருந்து விலகினாா் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ்.
ஏற்கெனவே 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், 2020 ஆஸி. ஓபன் சாம்பியன் சோபியா கெனின் ஆகியோா் மகளிா் பிரிவில் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தனா். தற்போது மூன்றாவதாக வீனஸ் வில்லியம்ஸும் காயத்தால் விலகுவதாக அறிவித்துள்ளாா். ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியன் டொமினிக் தீம், 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஸ் ரபேல் நடால், ரோஜா்பெடரா் ஆகியோா் விலகி விட்டனா்.