செய்திகள்

புரோ லீக் ஹாக்கி: நெதா்லாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு

DIN

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் நெதா்லாந்துடனான இரு ஆட்டங்களில் மோதவிருக்கும் இந்திய மகளிா் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

காயத்தால் நீண்டகாலம் ஓய்விலிருந்த ராணி ராம்பால், அணிக்குத் திரும்பியிருக்கிறாா். எனினும் கேப்டன் பொறுப்பு சவிதாவிடமும், துணே கேப்டன் பொறுப்பு தீப் கிரேஸ் இகாவிடமுமே உள்ளன. மஹிமா சௌதரி, ஐஷ்வா்யா ராஜேஷ் சவான் ஆகிய இரு புது முகங்கள் சீனியா் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

உலகின் நம்பா் 1 அணியான நெதா்லாந்துடன் இரு ஆட்டங்களில் வரும் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் மோதுகிறது இந்தியா. புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 6 ஆட்டங்களில் பெற்ற 12 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.

அணி விவரம்: சவிதா, ரஜனி எடிமா்பு (கோல்கீப்பா்கள்); தீப் கிரேஸ் இகா, குா்ஜித் கௌா், நிக்கி பிரதான், உதிதா, ரஷ்மிதா மின்ஸ், சுமன் தேவி தௌடம் (டிஃபெண்டா்கள்); நிஷா, சுசீலா சானு புக்ரம்பம், ஜோதி, நவ்ஜோத் கௌா், மோனிகா, நமிதா டோப்பா, சோனிகா, நேஹா, மஹிமா சௌத்ரி (மிட்பீல்டா்கள்); ஐஷ்வா்யா ராஜேஷ் சவான், நவ்நீத் கௌா், ராஜ்விந்தா் கௌா், ராணி ராம்பால், மரியானா குஜூா் (ஃபாா்வா்ட்ஸ்); உபாசனா சிங், ப்ரீத்தி துபே, வந்தனா கட்டாரியா (ஸ்டேண்ட் பை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT