ஆஸ்திரேலிய அணி 
செய்திகள்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தை இழந்த பிரபல வீரர்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியலில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN


வீரர்களைப் பெயர்களைக் கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியலில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

20 வீரர்கள் அடங்கிய புதிய வருடத்துக்கான பட்டியலில் ஜை ரிச்சர்ட்சமின் பெயர் இடம்பெறவில்லை. ஜோஷ் இங்கிலிஷ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். 25 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், ஆஸ்திரேலிய அணிக்காக 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 3 டெஸ்டுகள், 13 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட 17 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த டிம் பெயின் (தற்காலிக ஓய்வு), ஜேம்ஸ் பேட்டின்சன் (ஓய்வு), கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தற்போதைய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

ஒப்பந்தப் பட்டியலில் இல்லாத வீரர்களும் இனிமேல் இடம்பெறலாம். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 12 புள்ளிகளைப் பெற்றால் பட்டியலில் இடம்பெறுவார்கள். ஒரு டெஸ்டில் விளையாடினால் 5 புள்ளிகளும் ஒரு ஒருநாள் ஆட்டத்துக்கு 2 புள்ளிகளும் ஒரு டி20க்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் அதுபோல ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், ஸ்காட் போலண்ட், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் நடுவில் இணைக்கப்பட்டார்கள். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியல்:

ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், உஸ்மான் கவாஜா, லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், டேவிட் வார்னர், ஸாம்பா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

SCROLL FOR NEXT