செய்திகள்

குஜராத்தை அடக்கிய ஹைதராபாத்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹிர்திக் பாண்டியா 42 பந்துகளில் 50 ரன்களும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 பந்துகளில் 17 ரன்களும், நிக்கோலஸ் போரன் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். ஏய்டன் மார்க்ரம் நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக 19.1 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT