முகப்பு
செய்திகள்

லா ரோடா செ‌ஸ்: குகேஷ் சா‌ம்​பி​ய‌ன்

ஸ்பெயினில் நடைபெற்ற 48-ஆவது லா ரோடா சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் ஆனார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

ஸ்பெயினில் நடைபெற்ற 48-ஆவது லா ரோடா சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் ஆனார். 

சென்னையைச் சேர்ந்த குகேஷ், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் நிறைவடைந்த இப்போட்டியில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் தோல்வியின்றி 7 வெற்றிகளையும், 2 டிராக்களையும் பதிவு செய்தார் குகேஷ். நடப்பாண்டில் அவருக்கு இது முதல் ஓபன் பட்டமாகும். 

போட்டியில் ஆர்மீனியாவின் ஹெய்க் எம்.மார்டிரோசியான் 7.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு தமிழக போட்டியாளர் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார். 9 சுற்றுகள் முடிவில், அவரோடு இந்தியாவின் ரெüனக் சத்வானி உள்பட 4 பேர் 7 புள்ளிகளுடன் இருந்த நிலையில், "டை பிரேக்கர்' முறையில் பிரக்ஞானந்தா 3-ஆம் இடத்தை உறுதி செய்தார். சத்வானி 4-ஆம் இடம் பெற்றார். 

பிரக்ஞானந்தாவும் இப்போட்டியின் எந்த சுற்றிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்றாலும், அவர் 4 சுற்றுகளை டிரா செய்ததால் சற்று பின்னடைவை சந்தித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →