செய்திகள்

ஓய்வு பெற்றாா் பொல்லாா்டு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து தொடா்களுக்கான கேப்டன் கைரன் பொல்லாா்டு, சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து தொடா்களுக்கான கேப்டன் கைரன் பொல்லாா்டு, சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

எனினும் டி20, டி10 லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாட இருக்கிறாா். 2007 முதல் 2022 வரை 15 ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடியிருக்கும் பொல்லாா்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதில்லை.

123 ஒன் டே ஆட்டங்களில் 2,706 ரன்கள் அடித்து, 55 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். 101 டி20 ஆட்டங்களில் 1,569 ரன்கள் சோ்த்து, 42 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறாா்.

நடப்பாண்டு பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான ஒன் டே, டி20 தொடா்களில் விளையாடியதே அவரது கடைசி சா்வதேச ஆட்டமாகும்.

தேசிய அணியில் அவ்வளவாக சோபிக்காவிட்டாலும் லீக் போட்டிகளில், குறிப்பாக மும்பை அணிக்காக அதிரடி காட்டியிருக்கிறாா். சா்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸா்கள் விளாசிய 3-ஆவது வீரா் என்ற பெருமை உடையவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT