செய்திகள்

சச்சின் சாதனையை இன்று முறியடிப்பாரா ருதுராஜ் கெயிக்வாட்?

DIN

ஐபிஎல் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை ருதுராஜ் கெயிக்வாட் இன்று நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் முதலிடம் பிடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. இந்த வருடம் ருதுராஜை ஏலத்துக்கு முன்பே ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த வருட ஜூலையில் தவன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ருதுராஜ், இரு ஆட்டங்களில் விளையாடினார். பிறகு கடந்த பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடினார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் ருதுராஜ் சுமாராகவே தொடங்கியுள்ளார். 6 ஆட்டங்களில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

இந்நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் ருதுராஜ் 53 ரன்கள் எடுத்துவிட்டால், ஐபிஎல் போட்டியில் குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். இதுவரை விளையாடிய 28 ஐபிஎல் ஆட்டங்களில் 947 ரன்கள் எடுத்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 2010 ஐபிஎல் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தினார். 34 இன்னிங்ஸில் சுரேஷ் ரெய்னா 1000 ரன்களை எடுத்துள்ளார். படிக்கல் 35 இன்னிங்ஸில். 

ஐபிஎல் போட்டியில் குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்த வீரர் என்கிற பெருமையைக் கொண்டவர் - ஷான் மார்ஷ். 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார். சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸிலும் மேத்யூ ஹேடன் 25 இன்னிங்ஸிலும் எடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT