முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷில் தேவி லிக்மாபம் அரையிறுதியில் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 2 ஆகஸ்ட், 2022 at 11:58 AM
சுஷிலா தேவி
பகிர்:

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி லிக்மாபம் அரையிறுதியில் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் கடந்த 28ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நான்காவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெற்ற ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி, தென்ஆப்பிரிக்க வீராங்கனை மைக்கேலாவுடன் மோதினார். 

Advertisement

48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் மைக்கேலாவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை சுஷிலா தேவி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.