செய்திகள்

அஃப்ரிடி சாதனையைத் தாண்டுவாரா ரோஹித் சர்மா?

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 3-ம் இடத்தில் உள்ளார்.

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 3-ம் இடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 3-ம் இடத்தில் உள்ளார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-ம் இடத்துக்கு முன்னேறிவிடுவார். அஃப்ரிடி 476 சிக்ஸர்களும் ரோஹித் சர்மா 473 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா இந்தச் சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்: அதிக சிக்ஸர்கள்

கிறிஸ் கெயில் - 553
அஃப்ரிடி - 476
ரோஹித் சர்மா - 473*

டெஸ்ட் கிரிக்கெட்டில் 64 சிக்ஸர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்களும் டி20யில் 159 சிக்ஸர்களும் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT