செய்திகள்

பளுதூக்குதல்: ஒரே நாளில் 3 தங்கம்

DIN

மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கமும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா - கனடாவின் லச்லான் மௌரிஸ் மெக்னீலை தோற்கடித்தாா். இறுதிச்சுற்று வரை 3 சுற்றுகளில் களம் கண்ட பஜ்ரங், அவற்றில் மொத்தமாகவே 2 புள்ளிகளை மட்டுமே எதிராளிகளுக்கு விட்டுக் கொடுத்தாா். காமன்வெல்த்தில் இது அவருக்கு 3-ஆவது பதக்கமாகும்.

ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் தீபக் புனியா - பாகிஸ்தானின் முகமது இனாமை தோற்கடித்து தங்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டியில் இவா் தனது முதல் பதக்கத்தையே தங்கமாக வென்றுள்ளாா்.

மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சாக்ஷி மாலிக் - கனடாவின் அனா பௌலா காடினெஸ் கொன்ஸால்ஸை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். சாக்ஷிக்கு இது 3-ஆவது பதக்கமாகும். கிளாஸ்கோ (2014) போட்டியில் வெள்ளியும், கோல்டு கோஸ்ட் (2018) போட்டியில் வெண்கலமும் வென்றிருந்தாா் அவா்.

மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அன்ஷு மாலிக் - நைஜீரியாவின் ஒடுனயோ ஃபொலாசேட் அடேகுரோயேவிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். தனது முதல் காமன்வெல்த் போட்டியில் களம் கண்டிருந்த அன்ஷு, தனது பிறந்தநாளிலேயே பரிசாக வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா்.

இதுதவிர, ரெபிசேஜ் சுற்றில் வென்ற திவ்யா கக்ரான் (68 கிலோ), மோஹித் கிரெவால் (125 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண்கின்றனா்.

பதக்கப் பட்டியல்

போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா, வெள்ளிக்கிழமை முடிவில் 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT