காமன்வெல்த் போட்டியில் இந்தியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தங்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என வீழ்த்தி தங்கம் வென்றார்.
காமன் வெல்த போட்டியில் இதுவரை இந்தியா 22 தங்கம் உட்பட 60 பதக்கங்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.