செய்திகள்

ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பாரா?

காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. 

DIN

காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. 

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. 

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் வாஷிங்டன், ஃபீல்டிங் செய்தபோது கீழே விழுந்ததில் இடது தோள்பட்டையில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓய்வறைக்கு அவர் திரும்பினார். முன்னெச்சரிக்கையாக அந்த ஆட்டத்தில் அவர் மேலும் பங்கேற்கவில்லை. ஞாயிறு வரை கவுன்டி கிரிக்கெட்டில் வாஷிங்டன் விளையாட வேண்டும். அதற்குப் பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்க ஹராரே செல்வார். தற்போது தோள்பட்டைக் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் வாஷிங்டன் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் கே.எல். ராகுலை கேப்டனாக நியமித்து ஜிம்பாப்வே தொடருக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதனால் காயம் விரைவில் குணமாகி ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT