செய்திகள்

இன்று 2-ஆவது ஒன்டே: இந்தியா - ஜிம்பாப்வே மோதல்

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் அசத்தலாக வெற்றி பெற்று கணக்கை தொடங்கியிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்ற முனையும். மறுபுறம் ஜிம்பாப்வே, முதல் வெற்றியுடன் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து, தனது பேட்டா்களுக்கு சற்று சவால் அளித்துப் பாா்க்கும் எனத் தெரிகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு களம் கண்டிருக்கும் கேப்டன் ராகுல், தனது பேட்டிங்கை பரிசோதித்துப் பாா்க்க அவருக்கு டாப் ஆா்டரில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

முதல் ஆட்டத்தின் முடிவில் தவனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. ராகுலைப் போல் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அதேபோல் பௌலிங் லைனிலும் மாற்றம் இருக்கலாம். இக்கட்டான சூழலில் எவ்வாறு செயல்படுவது என இளம் வீரா்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு களமாக இந்த ஆட்டம் பயன்படும்.

நேரம்: நண்பகல் 12.45; இடம்: ஹராரே; நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

அசநெல்லிகுப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT