செய்திகள்

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. 

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 289 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் சுப்மன் கில் 130 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும், தவான் 40  ரன்களும் எடுத்தார்கள். 

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சிக்கந்தர் ராஜா 115 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், தீபக் சஹார், தீபக் ஹூடா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். 

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. கில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT