செய்திகள்

வேதனையுடன் மும்பை அணியை விட்டு விலகும் மூத்த வீரர்!

மும்பை அணியை விட்டு விலகுவதாகப் பிரபல வீரர் ஆதித்யா தரே கூறியுள்ளார். 

DIN

மும்பை அணியை விட்டு விலகுவதாகப் பிரபல வீரர் ஆதித்யா தரே கூறியுள்ளார். 

மும்பையைச் சேர்ந்த 34 வயது ஆதித்ய தரே, 2009 முதல் 80 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான ஆதித்ய தரே, முதல்தர கிரிக்கெட்டில் 9 சதங்கள் எடுத்துள்ளார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 2 அரை சதங்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக காலிறுதி வரைக்கும் மட்டுமே விளையாடினார். 

மும்பை அணி கடைசியாக ரஞ்சி கோப்பையை வென்றபோது ஆதித்ய தரே கேப்டனாக இருந்தார். எனினும் அடுத்தப் பருவத்துக்கான மும்பை அணியின் வீரர்கள் பட்டியலில் ஆதித்ய தரே இடம்பெறவில்லை. 

இந்நிலையில் மும்பை அணியின் திட்டங்களில் தன்னுடைய பெயர் இல்லாததால் உத்தரகண்ட் அணிக்குத் தற்போது மாறியுள்ளார் ஆதித்யா தரே. இதுபற்றி அவர் கூறியதாவது:

மும்பையிலிருந்து விலகுவதை என்னால் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. மும்பை வீரராக மிகவும் பெருமிதத்துடன் விளையாடினேன். நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த விவகாரம் முடிந்த விதம் வேதனையை அளித்தது. எனினும் புதிய சவாலுக்குத் தயாராக உள்ளேன் என்றார்.

அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லேட், ஆதித்யா தரே எனத் தற்போது மூன்று வீரர்கள் மும்பை அணியை விட்டு மற்ற அணிகளுக்குச் சென்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT