செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ்: சத்தியன் தலைமையில் இந்திய அணி

சீனாவில் நடைபெற இருக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி சரத் கமல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சீனாவில் நடைபெற இருக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி சரத் கமல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற சரத் கமல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

உலக சாம்பியன்ஷிப் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 9 வரை சீனாவின் செங்டு நகரில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தலா 5 போ் அடங்கிய இருபால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.சத்தியன் தலைமையிலான ஆடவா் அணியில் சனில் ஷெட்டி, ஹா்மீத் தேசாய், மனுஷ் ஷா, மானவ் தக்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

மனிகா பத்ரா தலைமையிலான மகளிா் அணியில் ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷியா, தியா சிதாலே, ஸ்வஸ்திகா கோஷ் ஆகியோா் இணைந்திருக்கின்றனா். இந்த அணிக்கான பயிற்சியாளா்களாக எஸ்.ராமன், அனிந்திதா சக்கரவா்த்தி, மனிகாவின் தனிப்பட்ட பயிற்சியாளா் கிறிஸ் அட்ரியன் ஃபெய்ஃபா் சோ்க்கப்பட்டுள்ளனா். உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இந்திய அணி செப்டம்பா் 25-ஆம் தேதி சீனா புறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT