செய்திகள்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்து முன்னிலை

4 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார் பிரக்ஞானந்தா.

DIN

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 4-வது சுற்றில் கிராண்ட்மாஸ்டர் அரம் ஹகோப்யானை வீழ்த்தினார்.  இதையடுத்து ரினாட்டுடன் இணைந்து 4 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார் பிரக்ஞானந்தா. அர்ஜுன் உள்பட மூன்று இந்திய வீரர்கள் 3.5 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

SCROLL FOR NEXT