வெற்றியைக் கொண்டாடும் தென் கொரிய வீரர்கள் 
செய்திகள்

உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்கவுள்ள அணிகள் முடிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுகலை தென் கொரியா 2-1 எனவும் கானாவை உருகுவே 2-0 எனவும் ஸ்விட்சர்லாந்து செர்பியாவை 3-2 எனவும் கேமரூன் பிரேஸிலை 1-0 எனவும் வீழ்த்தின. இதையடுத்து நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்விட்சர்லாந்தும் தென் கொரியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. கூடுதலாக ஒரு கோல் அடித்திருந்தால் உருகுவே தகுதி பெற்றிருக்கும். இதனால் வெற்றி பெற்றும் அந்த அணியால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

பிரேஸிலும் போர்ச்சுகலும் தங்களுடைய பிரிவில் முதலிடத்தைப் பிடித்தாலும் கடைசி ஆட்டத்தில் தோற்றுள்ளன. பிரேஸிலைத் தோற்கடித்தாலும் கேமரூன் அணியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, மொராக்கோ, செனகல், அர்ஜென்டீனா, பிரேஸில், அமெரிக்கா.

ஐரோப்பா (8): பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து
ஆசியா (3): ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா
ஆப்பிரிக்கா (2): மொராக்கோ, செனகல்
தென் அமெரிக்கா (2): அர்ஜென்டீனா, பிரேஸில்
வடக்கு & மத்திய அமெரிக்கா: அமெரிக்கா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

SCROLL FOR NEXT