செய்திகள்

ஹெட், லபுஷேன் சதம்: முதல் நாளில் 330 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 21 ரன்களுக்கும் கேப்டன் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். உஸ்மான் கவாஜா 62 ரன்கள் எடுத்தார். லபுஷேன், டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதமெடுத்தார்கள். லபுஷேன் 186 பந்துகளிலும் ஹெட் 125 பந்துகளிலும் தங்களுடைய சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 

முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி, 89 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 120, ஹெட் 114 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

முதல் டெஸ்டை 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT