செய்திகள்

மார்க் வுட் வேகத்தில் விக்கித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. 

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டம் நிறைவடைய செவ்வாய்க்கிழமை வரை அவகாசம் இருந்தும், பாகிஸ்தான் பேட்டர்களை நிலைக்க விடாமல் விக்கெட்டுகளை சரித்து இங்கிலாந்துக்கு வெற்றி தேடித் தந்தார் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட். 

இந்தத் தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை கைப்பற்றியிருக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பில் கடந்த 9 டெஸ்டுகளில் 8 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து. 

முன்னதாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 51.4 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் பெüலிங்கில் அறிமுக வீரர் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார். 

பின்னர் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் பாபர் ஆஸம் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருக்க, இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 79 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து, 64.5 ஓவர்களில் 275 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேரி புரூக் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 108 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானின் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இறுதியாக, 355 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய பாகிஸ்தான், ஞாயிற்றுக்கிழமை நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை ஆட்டத்தை செüத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப் தொடர்ந்தனர். 

இதில் அஷ்ரஃப் 10 ரன்களுக்கு வெளியேற்றப்பட, பின்னர் வந்த முகமது நவாஸ், ஷகீலுடன் இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் சரிவை சற்று கட்டுப்படுத்தி ரன்கள் சேர்த்து பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்தது. அதில் நவாஸ் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு வெளியேற்றப்பட, அடுத்த 2 ஓவர்களிலேயே ஷகீலும் 8 பவுண்டரிகளுடன் 94 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

எஞ்சிய விக்கெட்டுகளை பாகிஸ்தான் மளமளவென இழந்தது. அப்ரார் அகமது 4 பவுண்டரிகளுடன் 17, ஜாஹித் மஹ்மூத் 0, முகமது அலி 0 ரன்களுக்கு அவுட்டாக, 102.1 ஓவர்களில் 328 ரன்களில் பாகிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து பெüலிங்கில் மார்க் வுட் 4, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 2, ஜேக் லீச், ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT