செய்திகள்

தந்தையைப் போல் பிள்ளை: ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!

இந்த ஆட்டத்தில் முதல் தர கிரிக்கெட்டுக்கு அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். 

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணி மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 லிஸ்ட் ஏ, 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் இந்த வருடம் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். கோவா - போர்வோரிமில் நடைபெற்று வரும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த ஆட்டத்தில் முதல் தர கிரிக்கெட்டுக்கு அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். 

முதல் நாளன்று கோவா அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பிரபுதேசாய் 81, அர்ஜுன் டெண்டுல்கர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இரு வீரர்களும் இன்று சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்கள். 23 வயது அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்திலேயே 177 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தது போல அர்ஜுனும் சதமடித்துள்ளார். 

கோவா அணி 140 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பிரபுதேசாய் 172, அர்ஜுன் டெண்டுல்கர் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT