செய்திகள்

‘இந்த ஆண்டின் மகிழ்ச்சியான நாள்’: நடிகர் தனுஷின் வைரல் ட்விட்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி குறித்து நடிகர் தனுஷ் டிவிட்டரில் பதிவிட்ட செய்தி வைரலாகி வருகின்றது.

DIN

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி குறித்து நடிகர் தனுஷ் டிவிட்டரில் பதிவிட்ட செய்தி வைரலாகி வருகின்றது.

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆா்ஜென்டீனாவும் பிரான்ஸும் மோதியது.

இறுதி ஆட்டத்தில் முதலில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் (90 நிமிஷங்கள்) முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, கூடுதல் நேரத்தின் (30 நிமிஷம்) நிறைவிலும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது. பின்னா் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆா்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, டி மரியா ஆகியோரும், பிரான்ஸுக்காக கிலியன் பாபேவும் கோல்கள் அடித்து அசத்தினாா்.

ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், இதில் தனது அணிக்கு கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக விலகும் கனவை நனவாக்கினார். 

இந்நிலையில், கால்பந்து இறுதி ஆட்டம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவில்,

“மெஸ்ஸி. விசித்திரமான முடிவுகளும் சாத்தியம். மிகவும் தகுதியானவை. டி மரியா தேவைப்படும் தருணத்தில் நன்றாக விளையாடினார். மேலும் இந்த போட்டியிலும், உலகக் கோப்பை முழுவதிலும்கூட கதாநாயகனாக எமி மார்டினெஸ் விளங்குகிறார்.

இந்த ஆண்டின் மகிழ்ச்சியான நாளாக இருக்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த டிவிட்டர் பதிவை தனுஷின் ரசிகர்களும், கால்பந்து ரசிகர்களும் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT