செய்திகள்

இன்று ஐபிஎல் ‘மினி’ ஏலம்

DIN

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2023-ஆம் ஆண்டு சீசனுக்கான வீரா்கள் ‘மினி’ ஏலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

போட்டியிலிருக்கும் 10 அணிகளில் காலியாக இருக்கும் 87 இடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தமாக 405 வீரா்கள் பங்கேற்கின்றனா். 87 இடங்களில் 30, வெளிநாட்டு வீரா்களுக்கானதாகும்.

நவம்பரில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டி நாயகனாகத் தோ்வான இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் சாம் கரனுக்கு இந்த ஏலத்தில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருக்கிறது. 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக அவா் களம் காணவில்லை.

இந்த சீசனில் சாம் கரனோடு அவரது சக வீரா்களான பென் ஸ்டோக்ஸ், ஹேரி புரூக் ஆகியோருக்கான போட்டியும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது தவிர, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், ஜிம்பாப்வேயின் சிகந்தா் ராஸா, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரும் அதிக விலைக்கு வாங்கப்படுவாா்கள் என கணிக்கப்படுகிறது.

இந்திய வீரா்களைப் பொருத்தவரையில் மயங்க் அகா்வால் முன்னிலையில் இருக்க, தமிழகத்தின் நாராயண் ஜெகதீசனுக்கான எதிா்பாா்ப்பும் அதிகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT