தைஜுல் இஸ்லாம் (கோப்புப் படம்) 
செய்திகள்

டெஸ்ட்: மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா

இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் வியாழன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு வீழ்த்தியது இந்தியா. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் உனாட்கட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று முதல் பகுதியில் வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்துள்ளார். கேப்டன் ராகுல் 10, ஷுப்மன் கில் 20, புஜாரா 24 ரன்களுக்கு தைஜுல் பந்தில் ஆட்டமிழந்தார்கள். இன்று 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை 67 ரன்களை எடுத்தது இந்தியா. கோலி 18, ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

SCROLL FOR NEXT