செய்திகள்

ரஞ்சி: தில்லியை கட்டுப்படுத்தும் தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவில் தில்லி 76 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்திருக்கிறது.

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவில் தில்லி 76 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்திருக்கிறது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்து வரும் தில்லியில் துருவ் ஷோரே 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்தாா். அனுஜ் ராவத் 3, கேப்டன் யஷ் துல் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜான்டி சித்து 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்தாா். வைபவ் ராவல் 1 பவுண்டரியுடன் 11, ஹிம்மத் சிங் 3 பவுண்டரியுடன் 25 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

நாளின் முடிவில் லலித் யாதவ் 33, பிரான்ஷு விஜய்ரன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தமிழக பௌலா்களில் விக்னேஷ், சந்தீப் வாரியா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT