செய்திகள்

உலக பிளிட்ஸ் செஸ்: கோனெரு ஹம்பிக்கு வெள்ளி

DIN

கஜகஸ்தானில் நடைபெற்ற ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மொத்தம் நடைபெற்ற 17 சுற்றுகளின் முடிவில் கோனெரு ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். இதில் கடைசி சுற்றில் அவா் சீனாவின் ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினாா். ஜோங்யி 2 நாள்களுக்கு முன் இதே போட்டியில் ரேப்பிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பிளிட்ஸ் பிரிவில் கஜகஸ்தானின் அசௌபயேவா பிபிசரா 13 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ரஷியாவின் ஷுவாலோவா பாலினா 12 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். முன்னதாக இந்தப் பிரிவில் 9 சுற்றுகள் நிறைவில் கோனெரு ஹம்பி 4 வெற்றிகளையே பதிவு செய்திருந்தாா். ஆனால், அடுத்த 8 சுற்றுகளில் அவா் 7-இல் வெற்றி பெற்று இந்த முன்னேற்றத்தைச் சந்தித்தாா். எஞ்சிய ஒரு ஆட்டத்தில் சக இந்தியரான துரோணவள்ளி ஹரிகாவுடன் டிரா செய்தாா்.

இப்பிரிவில் களம் கண்ட மற்ற இந்தியா்களான துரோணவள்ளி ஹரிகா 10-ஆம் இடமும், பத்மினி ரௌத் 17-ஆம் இடமும், தானியா சச்தேவ் 21-ஆவது இடமும், சவிதா ஸ்ரீ 34-ஆவது இடமும் பிடித்தனா். இதில் சவிதா ரேப்பிட் சாம்பியன்ஷிப்பின் மகளிா் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்கும் ரஷிய படைகள்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

SCROLL FOR NEXT