மகளிர் கிரிக்கெட் 
செய்திகள்

இந்தியாவில் மகளிர் டி20 போட்டி: 90 வீராங்கனைகள் தேர்வு

மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில்...

DIN

மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. 

பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிப்ரவரி 7 முதல் 23 வரை போட்டி நடைபெறவுள்ளது. ஃபேன்கோட் செயலில் ஆட்டங்கள் நேரலையில் ஒளிபரப்பாகும். 

இந்த டி20 போட்டியில் ஈஸ்ட் பெங்கால் கிளப், ஆர்யன் கிளப் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது.  இதனால் கல்யாணி நகரில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாதெமி மைதானத்தில் மகளிர் டி20 பிளாஸ்ட் போட்டியின் அனைத்து ஆட்டங்களும் நடைபெறுகின்றன. ருமேலி தர், சுகன்யா பரிதா, வனிதா வி.ஆர். போன்ற இந்தியாவுக்காக விளையாடிய சர்வதேச வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT