ஜஸ்டின் லாங்கர் 
செய்திகள்

ஆஸி. கிரிக்கெட்டில் சர்ச்சை: பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ராஜிநாமா

குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது.

DIN

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் ராஜிநாமா செய்துள்ளார்.

சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது. 

2018-ல் தென்னாப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடினமான அச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 51 வயது லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தபோதும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது. இதை ஏற்றுக்கொள்ளாத லாங்கர், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜூன் மாதத்துடன் லாங்கரின் பதவிக்காலம் முடிவடைகிறது. தன்னுடைய ஒப்பந்தத்தை நீண்ட காலத்துக்கு நீட்டிக்க லாங்கர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT