மகிழ்ச்சியில் ஷிவம் துபே / மனைவி 
செய்திகள்

மகன் பிறந்த சில மணிநேரங்களில் சிஎஸ்கேவில் ஷிவம் துபே!

கிரிக்கெட் வீரர் ஹிவம் துபேயின் மனைவி அஞ்சுமிற்கு இன்று நண்பகல் மகன் பிறந்தது. மகன் பிறந்த சில மணிநேரங்களில் ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகியுள்ளார்.

DIN

கிரிக்கெட் வீரர் ஹிவம் துபேயின் மனைவி அஞ்சுமிற்கு இன்று நண்பகல் மகன் பிறந்தது. மகன் பிறந்த சில மணிநேரங்களில் ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகியுள்ளார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அதிக அளவிலான மகிழ்ச்சி நமது வாழ்வில் அரங்கேறுகிறது. ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். 

அவர் இதனைப் பகிர்ந்த சில மணிநேரங்களில் ஐபிஎல்  ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார். 

அவருக்கான அடிப்படை தொகையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 4 கோடிக்கு சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

ஆல்-ரௌண்டர் ஷிவம் துபே இதுவரை 24 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.17. ஸ்டிரைக் ரேட் 120.54. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT