செய்திகள்

முதல் டி20: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்களுக்குப் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயை கேட்டுக்கொண்டுள்ளது.

DIN


இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்களுக்குப் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. கடைசி இரண்டு டி20 ஆட்டங்கள் பிப்ரவரி 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடைசி 2 டி20 ஆட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பிசிசிஐயை கேட்டுக்கொண்டுள்ளதாக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆமதாபாத்தில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT