ஹர்ஷல் படேல் 
செய்திகள்

ஐபிஎல் ஏலம்: அதிக சம்பள உயர்வு பெற்ற வீரர் யார்?

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் அதிகச் சம்பள உயர்வு பெற்றுள்ளார்.

DIN

ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் நேற்றுடன் முடிவடைந்தது.

ஏலத்தில் 204 வீரர்கள் மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 10 அணிகளும் ஏலத்தில் தேர்வான வீரர்களுக்காக மொத்தமாக ரூ. 552 கோடியை ஒதுக்கியுள்ளன. 15 இந்திய வீரர்களும் 13 வெளிநாட்டு வீரர்களும் தலா ரூ. 7.50 கோடிக்கு மேல் சம்பளம் பெறவுள்ளார்கள்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளார். கடந்த வருடம் ஆர்சிபி அணிக்கு ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வான ஹர்ஷல் படேல் இம்முறை ரூ. 10.75 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். அதாவது 5275% சம்பள உயர்வு!

கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா, இம்முறை ராஜஸ்தான் அணியில் ரூ. 10 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். 4900% சம்பள உயர்வு. வெளிநாட்டு வீரர்களில் கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு ஆர்சிபி அணியில் விளையாடிய டிம் டேவிட், இம்முறை மும்பை அணியில் ரூ. 8.25 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். 4025% சம்பள உயர்வு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT