செய்திகள்

ஒலிம்பிக்ஸ்: ஆரிஃப் முகமது கான் ஏமாற்றம்

DIN

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஸ்லாலம் பிரிவில் இந்திய வீரா் ஆரிஃப் முகமது கான் பந்தயத்தை நிறைவு செய்யாமல் ஏமாற்றமளித்தாா். இத்துடன் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டில் ஆடவருக்கான ஸ்லாலம் பிரிவில் களம் கண்டாா் ஆரிஃப். இரு பந்தயங்கள் நடத்தப்பட்டு, அவற்றில் போட்டியாளா்கள் இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரத்தின் மொத்த கணக்கீட்டின் அடிப்படையில் வெற்றியாளா்கள் இந்த விளையாட்டில் அறிவிக்கப்படுகின்றனா்.

எனினும் இதில் முதல் பந்தயத்தையே ஆரிஃப் நிறைவு செய்யாமல் தவற விட்டாா். இதனால் அவா் தொடா்ந்து களம் காணும் தகுதியை இழந்தாா். இப்பிரிவில் பிரான்ஸ் வீரா் கிளமென்ட் நோயல் மொத்தமாக 1 நிமிஷம் 44.09 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றாா்.

ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் ஸ்ட்ரோல்ஸ் அவரை விட 0.61 விநாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டு வெள்ளியும், நாா்வே வீரா் செபாஸ்டியன் ஃபோஸ் சோல்வாக் 0.70 விநாடிகள் அதிகமாக எடுத்து வெண்கலமும் பெற்றனா். தங்கம் வென்ற கிளமென்ட் நோயல் கடந்த குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் 0.04 விநாடிகள் வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்து 4-ஆம் இடம் பிடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டியல்: போட்டியின் 13-ஆம் நாளான புதன்கிழமை நிறைவில், நாா்வே 28 பதக்கங்களுடன் (13 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 20 பதக்கங்களுடன் (10 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 19 பதக்கங்களுடன் (8 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT