செய்திகள்

டி20: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை 4-1 ஏற்கெனவே ஆஸி. அணி கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி டி20 மெல்போா்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 154/6 ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பா் மேத்யூ வேட் 43, மேக்ஸ்வெல் 29, ஜோஷ் இங்க்லிஸ் 23 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இலங்கை வெற்றி: பின்னா் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவா்களில் 155/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

குஸால் மென்டிஸ் 69 ரன்களையும், தஸுன் ஷனகா 35 ரன்களையும் விளாசினா். ஆஸி. தரப்பில் கேன் ரிச்சா்ட்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். மேக்ஸ்வெல் தொடா் நாயகன், குஸால் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றனா்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT