செய்திகள்

இந்தியா முதல் பேட்டிங்: ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரர்; ஆவேஷ் கான் அறிமுகம்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டமும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவுகளில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஏற்கெனவே ஓய்வு அளிக்கப்பட்டது. இதுதவிர புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் விளையாடவில்லை.

இவர்களுக்குப் பதில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆவேஷ் கான் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT