மீராபாய் சானு 
செய்திகள்

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றாா் மீராபாய் சானு

சிங்கப்பூா் சா்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதின் மூலம் காமன்வெல்த் 2022 போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்தியாவின் மீராபாய் சானு.

DIN

சிங்கப்பூா் சா்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதின் மூலம் காமன்வெல்த் 2022 போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்தியாவின் மீராபாய் சானு.

வரும் ஜூன் மாதத்தில் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தோ்வுச் சுற்று ஆட்டமாக சிங்கப்பூா் சா்வதேச பளுதூக்கும் போட்டி அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற மீராபாய் சானு முதன்முறையாக மகளிா் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 191 கிலோ (86+105 கிலோ) எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றாா். ஆஸி. வீராங்கனை ஜெஸிக்கா வெள்ளியும், மலேசியாவின் காஸென்ட்ரா வெண்கலமும் வென்றனா்.

மேலும் ஏனைய இந்திய வீரா்களான சங்கெட் சாகா் 55 கிலோ, ரிஷிகாந்த சிங் 55 கிலோ, விந்தியாராணி தேவி 59 கிலோ, ஆகியோரும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றனா். சாங்கெட் சாகா் புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா். விந்தியாராணியும் 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

ஒசூா் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT