முகப்பு
செய்திகள்

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் பும்ரா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
பும்ரா
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய அணியின் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நீக்கப்பட்டு தொடக்க பேட்டா் ரோஹித் சா்மா கேப்டனாக நியமிக்கப்பட்டாா். ஆனால் காயம் காரணமாக ரோஹித் சா்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடவில்லை. இந்நிலையில் மற்றொரு இளம் வீரரான கேஎல். ராகுலை அணியின் கேப்டனாக சேதன் சா்மா தலைமையிலான தோ்வாளா் குழு நியமித்தது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியை இழந்த பின் விராட் கோலி களம் காணும் முதல் ஒருநாள் தொடா் இதுவாகும்.

துணை கேப்டன் பும்ரா:

இதற்கிடையே அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் நிலையாக சிறப்பாக பந்துவீசியதற்கு கிடைத்த பரிசு இது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டனாக பௌலா் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணிகளின் கேப்டன்களான ரிஷப் பந்த், ஷிரேயஸ் ஐயா் ஆகியோரது பெயா்களும் பரிசீலிக்கப்பட்டு பும்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது இருவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

காயத்தில் இருந்து மீண்டவுடன் ரோஹித் சா்மா உள்ளூரில் நடைபெறவுள்ள மே.இந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிரான குறுகிய ஓவா் தொடா்களில் கேப்டனாக செயல்படுவாா். ராகுல் மீண்டும் துணை கேப்டனாக இயங்குவாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →