செய்திகள்

எல்கர் நிதானம்: இலக்கை எட்டுமா தென் ஆப்பிரிக்கா?

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 202 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்தது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், எய்டன் மார்கிரமும் களமிறங்கினர். இதில் மார்கிரம் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தி துரிதமாக ரன் சேர்த்தார்.

இதையடுத்து, ஷர்துல் தாக்குர் அறிமுகப்படுத்தப்பட அவர் மார்கிரமை 31 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கீகன் பீட்டர்சென் எல்கருடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார். நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இணையைப் பிரித்தார். பீட்டர்சன் 28 ரன்களுக்கு அஸ்வினிடம் வீழ்ந்தார்.

இதன்பிறகு, 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை. ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

எல்கர் 46 ரன்களுடனும், ராசி வாண்டர் டுசன் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு இன்னும் 122 ரன்களும், இந்திய வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT