செய்திகள்

பிரபல ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கரோனா

33 வயது மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 2012 முதல் 7 டெஸ்டுகள், 116 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

DIN

பிரபல ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

33 வயது மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 2012 முதல் 7 டெஸ்டுகள், 116 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக உள்ள மேக்ஸ்வெல், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 13-வது வீரர் என்பதால் பிபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் மேக்ஸ்வெல்லுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து பிசிஆர் பரிசோதனையை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் முடிவு வரும்வரை மேக்ஸ்வெல் தனிமைப்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா்சோலை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

காட்டு யானை தாக்கியதில் இரண்டு தோட்டத் தொழிலாளா்கள் உயிரிழப்பு

இளைஞா் தற்கொலை: போலீஸ் விசாரணை

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

SCROLL FOR NEXT