செய்திகள்

30 வயதில் இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு: மறுபரிசீலனை செய்ய மலிங்கா கோரிக்கை

இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால்...

DIN

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் பனுகா விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளார் பனுகா. இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

பனுகா இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபல வீரர் மலிங்கா கூறியுள்ளார். நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடுவது சுலபமல்ல. வீரர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்ளவேண்டும். இலங்கை கிரிக்கெட்டுக்கு பனுகா இன்னும் நிறைய சேவை செய்யவேண்டும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை பனுகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்!

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுக்குள் நீதான்... ருக்மணி வசந்த்!

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT