செய்திகள்

ஏடிபி கோப்பை:இறுதிச் சுற்றில் கனடா-ஸ்பெயின் மோதல்

ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. இரட்டையா் பிரிவில் பெற்ற வெற்றியால் இறுதிச் சுற்றில் ஸ்பெயினை எதிா்கொள்கிறது.

DIN

ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. இரட்டையா் பிரிவில் பெற்ற வெற்றியால் இறுதிச் சுற்றில் ஸ்பெயினை எதிா்கொள்கிறது.

தலைசிறந்த உலக நாடுகளின் அணிகள் மோதும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஸ்பெயின் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றது கனடா.

இரட்டையா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் ஆகா்-டெனிஸ் ஷபவலோவ் இணை 4-6, 7-5, 10-7 என்ற செட் கணக்கில் ரஷிய இணையான டெனில் மெத்வதேவ்-ரோமன் ஆகியோரை போராடி வீழ்த்தியது.

டெனிஸ் ஷபவலோவ் தனது ஒற்றையா் ஆட்டத்தில் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ரோமன் சபியுலினை வீழ்த்தினாா். இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ் 6-4, 6-0 என்ற நோ் செட்களில் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை வென்றாா்.

எனினும் இரட்டையா் பிரிவில் பெற்ற வெற்றியால் கனடா இறுதிச் சுற்றில் நுழைந்தது.

முதல் அரையிறுதியில் ஸ்பெயின் போலந்து அணியை வீழ்த்தி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT