செய்திகள்

பிரபல தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் திடீர் ஓய்வு அறிவிப்பு

DIN

பிரபல தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

34 வயது கிறிஸ் மோரிஸ், 2012 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 4 டெஸ்டுகள், 42 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2017-க்குப் பிறகு டெஸ்டிலும் 2019-க்குப் பிறகு ஒருநாள், டி20யிலும் அவர் விளையாடவில்லை. 

ஐபிஎல் 2021 போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 81 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸை ஐபிஎல் 2021 ஏலத்தில் ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். (2020 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ. 10 கோடிக்குத் தேர்வு செய்தது). அதற்கு முன்பு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் சிங்கின் சாதனையை மோரிஸ் தகர்த்தார். எனினும் ஐபிஎல் 2021 போட்டியில் 11 ஆட்டங்களில் விளையாடி 67 ரன்களும் 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில்  அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார் கிறிஸ் மோரிஸ். அடுத்ததாக தென்னாப்பிரிக்க உள்ளூர் அணியான டைட்டன்ஸுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT