செய்திகள்

வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமன் செய்த நியூசிலாந்து

DIN

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது வங்கதேச அணி. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி. 2-வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து அணி

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. யாசிர் அலி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றது. 

ஃபாலோ ஆன் ஆன வங்கதேச அணி மீண்டும் பேட்டிங் செய்யவேண்டிய நிலைமை உருவானது. இன்றும் நியூசிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி 79.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு வங்கதேச அணியை ஆட்டமிழக்கச் செய்தது. லிட்டன் தாஸ் 114 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜேமிசன் 4 விக்கெட்டுகளும் வாக்னர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இன்றுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் ராஸ் டெய்லர் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். 2-வது டெஸ்டை  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1-1 என டெஸ்ட் தொடரைச் சமன் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT