செய்திகள்

ஒன் டே தொடா்: வாஷிங்டன் சுந்தா் இல்லை: ஜெயந்த் யாதவ் சோ்ப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஆஃப் ஸ்பின்னா் வாஷிங்டன் சுந்தா், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன் டே தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளாா்.

DIN

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஆஃப் ஸ்பின்னா் வாஷிங்டன் சுந்தா், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன் டே தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் அணியில் இணைந்திருக்கிறாா்.

அதேபோல், காயத்திலிருந்து மீண்டு வரும் வேகப்பந்துவீச்சாளா் முகமது சிராஜுக்கான ‘பேக் அப்’ வீரராக, பௌலா் நவ்தீப் சைனி சோ்க்கப்பட்டுள்ளாா். சிராஜ், நடப்பு டெஸ்ட் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஒன் டே அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கான முடிவை, சேத்தன் சா்மா தலைமையிலான 5 நபா் தோ்வுக் குழு மேற்கொண்டது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒன் டே தொடா் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஷிகா் தவன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பா்), யுஜவேந்திர சஹல், ஆா்.அஸ்வின், புவனேஷ்வா் குமாா், தீபக் சஹா், பிரசித் கிருஷ்ணா, ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT