செய்திகள்

எம்மாவுக்கு வெற்றி; லெய்லாவுக்கு தோல்வி

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றுகளில் ஒன்றில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானு வெற்றியை பதிவு செய்ய, மற்றொன்றில் கனடாவின் லெய்லா ஃபொ்னான்டஸ் தோல்வியை சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈா்த்திருந்ததால், இந்த இரு இளம் வீராங்கனைகளின் ஆட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இதில் போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருப்பவரும், அமெரிக்க ஓபன் நடப்புச் சாம்பியனுமான எம்மா 6-0, 2-6, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை தோற்கடித்தாா். ஸ்லோன், கடந்த 2017-இல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் ஆனவா் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், போட்டித்தரவரிசையில் 23-ஆவது இடத்திலிருந்த லெய்லாவை 6-4, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக தோற்கடித்தாா் ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிஸ்.

இதர முதல் சுற்றுகளில் போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்பின் முகுருஸா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் கிளாரா புரெலை சாய்த்தாா். 2-ஆவது இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 5-7, 6-3, 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் சாண்டா்சை வீழ்த்தினாா்.

இதேபோல 6-ஆம் இடத்திலிருக்கும் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட், 7-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

முா்ரேவுக்கு முதல் வெற்றி

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்திருக்கிறாா்.

அவா், போட்டித்தரவரிசையில் 21-ஆவது இடத்திலிருந்த ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை 6-1, 3-6, 6-4, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா். உலகின் 2-ஆம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் நடப்புச் சாம்பியனுமான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 6-1, 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் ஸ்விட்சா்லாந்தின் ஹென்றி லாக்சோனெனை வென்றாா்.

இதர முதல் சுற்றுகளில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ், 9-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே ஆகியோரும் வெற்றியை பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT