செய்திகள்

ஆஸி. ஓபன்: 4 மணி நேரம் போராடி அரையிறுதிக்கு முன்னேறிய நடால்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...

DIN

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பிரபல வீரர் நடால்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் அதில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். கடந்த வருடம் விம்பிள்டன், யு.எஸ். ஓபன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்த வருடத்தின் முதல் தொடக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். காலிறுதியில் தரவரிசையில் 14-ம் இடத்தில் உள்ள கனடாவைச் சேர்ந்த 22 வயது டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். மிகவும் பரபரப்பாக, 4 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற ஆட்டத்தில்  6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். வயிற்று வலி காரணமாக 4-வது செட்டில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

"பெண்களை யாராலும் தடுக்க முடியாது": விஞ்ஞானி செளமியா சாமிநாதன்

காத்திருப்புக்குத் தகுதியானது... கருப்பைப் பாராட்டிய சாய் அபயங்கர்!

எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT